நோய்களை வேரோடு எடுக்கும் வேப்பிலை! / உணவே மருந்து

டி மாதம் அம்மனின் மாதம் என, அழைப்பர். இவ்வுலகில் படைக்கப்பட்ட அனைத்தும், அம்மனுக்கு உரியதாகும். அதில், அம்மனுக்கு மிகவும் பிடித்தது வேப்பிலை. ஆன்மிகத்திலும், மருத்துவத்திலும் மிகப்பெரிய கடமையை செய்கிறது. வேப்பிலையின் மருத்துவப் பயன்களை காண்போம்.

* வேப்பங்கொழுந்து பொடியுடன், அதிமதுர பொடியை சேர்த்து, நீர் விட்டுக் கலந்து உலர வைக்கவும். உலர்ந்ததும் உருண்டைகளாக உருட்டி, தினமும், மூன்று வேளை உட்கொள்ளவும். இப்படி செய்துவர, அம்மை நோய் விரைவில் உடலை விட்டு அகலும்.

* வேப்ப இலையை அரைத்து புண் மற்றும் கட்டி உள்ள இடத்தில் பற்றுப் போட்டால், புண் விரைவில் ஆறும்.

* வேப்பம் பூவை ரசம் வைத்து, உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், பித்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும்.

* வேப்பிலையை அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் பூசினால், முகப்பரு மறைந்து, முகம் பொலிவு பெறும்.

* வேப்ப இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, உடல் முழுவதும் தேய்த்து, சிறிது நேரம் கழித்து குளித்தால், உடம்பில் உள்ள கொப்புளங்கள் பொரிந்து விடும்.


* வேப்ப இலையை அரைத்து சாறெடுத்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், பித்தம் தணியும்.

* தினமும் காலையில் வெறும் வயிற்றில், சிறிது வேப்பங்கொழுந்துடன், ஐந்து மிளகு சேர்த்து சாப்பிட்டு வர, வைரஸ் காய்ச்சலாக இருந்தாலும் குணமாகும். மேலும், சர்க்கரை நோயாளிகளுக்கும் இது, நல்ல தீர்வை கொடுக்கும்.

* வேப்பிலையை அரைத்து அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து, தலைக்கு தேய்த்து குளித்து வந்தால், பித்த மயக்கம் தெளியும்.

* வேப்ப இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, கால் வெடிப்பு, நகச்சுற்று போன்றவற்றிற்கு பற்றுப் போட்டால், நல்ல பலன் கிடைக்கும்.

* வேப்ப இலையை பச்சையாகவோ, வேக வைத்தோ சாப்பிட்டு வர, தீராத நோய்கள் அனைத்தும் தீரும்.


* சொரியாசிஸ், புழுவெட்டு நோய் மற்றும் சிரங்கு போன்ற நோய்களை போக்கும் வல்லமை வேப்பிலைக்கு உண்டு.

* வேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து குளித்தால், சரும நோய்கள் அனைத்தும் தீரும்.

* வேப்பிலையை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டால், சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------தேதி: 03.03.2026   

 

தங்களின் மேலான கருத்துக்கள், கடிதங்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன. அனுப்பவேண்டிய மெயில் ஐ.டி: madhvacharyatv2023@gmail.com வாட்சப் எண்ணிலும் அனுப்பலாம்.
வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027

-----------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்